Posts

குரங்கு குடும்பத்திலும்...

  அடர்ந்த காடு , அருவிகளின் சலசலப்பு . பல வகை கனிகளின் மணம் காற்றில் மிதக்கிறது . குரங்கு மரத்துக்கு மரம் தாவி பழங்களை ருசித்து ருசித்து கீழே எறிந்தது . குட்டிக்குரங்குகள் எடுத்து கடித்து சுவைத்தது . ஏங்க … போதும் கீழே இறங்குங்க . கொஞ்சம் இரு இந்தப்பழம் புதுசா இருக்கு பறிச்சு பாப்போம் . சொன்னா கேளுங்க … கீழே விழுந்துறப்போறீங்க . எப்பப் பாத்தாலும் ஒம் பக்கத்துலேயே இருக்கணும்னு நினைக்கீறீயா ? நான் சொல்றதைக் கேளுங்க … உங்களுக்கு மறதி வேறே ஜாஸ்தி கொப்பை புடிக்க மறந்துட்டீங்கன்னா அவ்வளவுதான் … நம்ம … இந்த காடு பாத்தீயா … எவ்வளவு அழகா செழிப்பா … எல்லா வகையான பழங்களையும் உண்டு மகிழ வசதியா இருக்கு . ஆமாங்க … சூப்பரா இருக்கு … என்று பெண் குரங்கு கழுத்தை கட்டிக் கொண்டது . எங்க அம்மாவையும் கூட்டி வரணும் . சொன்னது நம்ம கூடவா … கழுத்திலிருந்து கையை விடுவித்தது . ஆமா … அவங்க … இந்த மாதிரி காட்லல்லாம் அனுபவிச்சது கிடையாது . என்ன பேசுற நீ … அவங்க அங்கே ஜாலியாத்தானே இருக்காங்க . வேணும்னா ஒரு ...