உனக்கு மட்டும் காதலா...!
காதல் சுகமானது இதமானது பதமானது புனிதமானது இருந்தும் சில சமயங்களில் காதல் கரடு முரடானது . இருந்தாலும் காதல் சுகமானது . காதலுக்கும் காமத்துக்கும் சின்ன இடைவெளிதான் , தொட்டால் காமம் தொடாமல் காதல் ... பட்டால் பரவசம் படாவிட்டால் துரதிர்ஷ்டம் ... சே ... இதுக்கு மேலே எழுத வர மாட்டேங்குதே . ஜோயி ஆள் காட்டி விரலை மடக்கி தலையில் சுண்டினான் . ஏய் ... ஜோயி இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கே .... லெட்டர் டைப் பண்ணி நிறைய ட்ரேயிலே இருக்கு போ ... போயி சீக்கிரம் டெஸ்பேட்ஜ் பண்ற வழியப்பாரு போ ... ஹெட்கிளார்க் கோபால் விரட்டினார் . எழுதியதை மடித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு ஜோயி அவனுடைய கேபினை நோக்கி நடந்தான் . ஹெட்கிளா h க் கோபால் சுற்றும் முற்றும் நோட்டமிட்டார் . யாரும் இல்லை , யாரும் இல்லை , டாய்லெட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார் . வெளியில் வரும் போது முன்பிருந்த கோபக் களை கிடையாது . சிரித்த முகமாக வெளியில் வந்தார் . நேரடியாக ஜோயிடம் சென்றார் . ஜோயி வேறு ஒன்றும் முக்கியமான வேலை இல்லையே ...