உனக்கு மட்டும் காதலா...!

 காதல் சுகமானது இதமானது பதமானது புனிதமானது இருந்தும் சில சமயங்களில் காதல் கரடு முரடானது.

இருந்தாலும் காதல் சுகமானது.காதலுக்கும் காமத்துக்கும் சின்ன இடைவெளிதான்,தொட்டால் காமம் தொடாமல் காதல் ... பட்டால் பரவசம் படாவிட்டால் துரதிர்ஷ்டம் ...சே ... இதுக்கு மேலே எழுத வர மாட்டேங்குதே.ஜோயி ஆள் காட்டி விரலை மடக்கி தலையில் சுண்டினான்.

ஏய்...ஜோயி இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கே ....லெட்டர் டைப் பண்ணி நிறைய ட்ரேயிலே இருக்கு போ ...போயி சீக்கிரம் டெஸ்பேட்ஜ் பண்ற வழியப்பாரு போ... ஹெட்கிளார்க் கோபால் விரட்டினார்.
எழுதியதை மடித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு ஜோயி அவனுடைய கேபினை நோக்கி நடந்தான்.

ஹெட்கிளாhக் கோபால் சுற்றும் முற்றும் நோட்டமிட்டார். யாரும் இல்லை ,யாரும் இல்லை ,டாய்லெட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார். வெளியில் வரும் போது முன்பிருந்த கோபக் களை கிடையாது.சிரித்த முகமாக வெளியில் வந்தார்.
நேரடியாக ஜோயிடம் சென்றார். ஜோயி வேறு ஒன்றும் முக்கியமான வேலை இல்லையே உனக்கு.
ஏன்?சார்...
ஒன்னும் இல்லை பழைய லெட்டர்ஸ் எல்லாம் போஸ்ட் ஆகாமெ இருக்கு எல்லாத்தையும் இன்னிக்கு போஸ்ட் பண்ணிரு.
ஜோயிக்கு 25 வயதுதான் இருக்கும் நல்ல உடற்கட்டு ஜிம்முக்கு போயி உடலை வளர்த்து இருக்கிறான்.ஆபிஸ்ல கூட ஒரு ஜோடி டம்பில்ஸ் வைத்திருக்கிறான். அவனுடைய சீனியர் யாராவது திட்டினால் , அவனுடைய கோபத்தை போக்க நேராக ஸ்டாப் ரூமுக்கு வந்து எதையாவது போட்டு உடைத்து விடுவான்.அல்லது பக்கத்தில் உள்ள டேபிளில் ஓங்கி குத்துவான்.இப்படித்தான் அவன் கோபத்தை வெளிப்படுத்துவான். ஆதனால் யாரும் ஜோயிடம் பகை வளர்த்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.
ரமணி மேடமும் ஜோயியும் முனுமுனுன்னு ஏதாவது பேசிக் கொண்டு இருப்பார்கள் கேபினுக்குள் இருந்து ஹெட்கிளார்க்கை பாத்துபாத்து பேசுவாங்க.

இதை நிறைய தடைவ கவனித்த கோபாலுக்கு மனசுல ஒரு பயம் , அதனால அவர் அவுங்க பிரச்னையில தலையிடுறது இல்லை.
ஜோயி கேபினை விட்டு வெளியே வந்து லெட்டர் பாக்ஸில் உள்ள மீதமுள்ள லெட்டர்களையும் எடுத்து போஸ்ட் செய்வதற்கு தயாரானான்.
ரமணி மேடம் ஜோயிக்கு ஒத்தாசை செய்தாள்.போஸ்ட்டல் ஸ்டாம்ப்பெல்லாம் ரமணிமேடம பொறுப்பில் தான் இருக்கும்.
சார்முடிஞ்சிருச்சு நான் போஸ்ட் ஆபிஸ் போயிட்டு வாரேன்.ஸ்டான்டில் மாட்டியிருந்த போஸ்ட் பாக்ஸ் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
கோபால் பால்கனிக்கு வந்து குனிந்து பார்த்தான்.அவரவர் வேலையை ஊழியர்களும் சுமை தூக்குபவர்களும் செய்து கொண்டு இருந்தார்கள். வரிசையாக நான்கைந்து வேன்கள் சரக்கோடு நின்று கொண்டிருந்தன.

கோபாலுக்கும் வயது 26 தான் கோபாலுக்கு மேல் இதிகாரிகள் இருந்தாலும்
அங்கே கோபால் சொல்படிதான் ஆபிஸ் வெலையெல்லாம் நடக்கும். கோபாலுக்கு சீக்கிரம் மேனேஜர் பதவி கிடைக்கும் என்று ஊழியர்கள் மத்தியில் பேச்சு.

இவ்வளவு துடிப்பாகவும் ,புத்திசாலித்தனமாகவும் சுறு சுறுப்பாக இயங்குவதற்கு காரணம் காதல்தான்.
சர்மிளாகோபாலின் கனவுக்கன்னி தினமும் கோபாலுக்கு லெட்டர் எழுதுவாள்.
சில நேரங்களில் ரெண்டு லெட்டர் கூட ஒரே நாளில் வரும்.
கோபால் இந்த லெட்டரை படித்தவுடன் ஏதோ விட்டமின் மாத்திரை சாப்பிட்டது போல உணர்வான்.

கோபாலின் காதல் அந்த ஆபிஸில் ஒரு சில பேருக்கு மட்டும் தான் தெரியும்.அந்த ஒரு சில பேரில் ஒருவருக்கு மட்டும் சர்மிளாவின் போட்டோ காண்பித்திருக்கிறான்.

ஜோயி போஸ்ட் ஆபிஸ் போயிருக்கிறான் என்றால்இங்கே கோபாலுக்கு இருக்கை கொள்ளாது.குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்குமாக அலைவான்.
ஜோயி லெட்டர் எடுத்து வந்து அவரவர் கைகளில் கொடுப்பதில்லை .லெட்டர் பாக்ஸில் போட்டுவிடுவான். பார்த்து எடுத்து கொள்ளவேண்டும்.
சே! என்னஜோயி எங்க போயிட்டான் .
ரமேஷ் சூடா காபி கொண்டுவா
காபி வந்தது.
காபியை உறிஞ்சினான்.
இண்டர்காம் அழைத்தது.

கோபால்
சார்நான் ஜக்குபாய் பேசுறேன் . பாம்பேல்ல இருந்து ஜி.எம் கூப்பிட்டார்.நீங்க சீட்ல இல்லமறுபடியும் கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கார்.
என்ன விசயமாம்?
மறுபடியும் கூப்பிடுவார் சார்.

ஜோயி வந்துவிட்டான்எடுத்து வந்த லெட்டர்களை பாக்ஸில் போட்டான்.
பாக்ஸை நோக்கி சிலர் வேகமாக சென்றார்கள்.கோபால் எப்போதுமே கடைசியாகத்தான் செல்வான்.அப்படித்தான் இன்றும் சென்றான்.
கோபாலுக்கு லெட்டர் ஒன்றும் வரவில்லை.
சர்மிளாக்கு என்ன ஆச்சு. சரிராத்திரி போன்ல பேசிக்கலாம்.
ஜோயிஎனக்கு லெட்டர் எதுவும் இல்லையா?
பாக்ஸ்ல பாத்தீங்களா
பாத்துட்டேன்
அப்போ இல்ல
கோபால் மௌனமானான்.
டெலிபோன் மணி அடித்தது.
ஹலோ கோபால்
கோபால் சௌக்யமாவைத்தியநாதன்
என்ன சார் எப்படி இருக்கீங்க.
நல்லா இருக்கேன்பாஉன்னுடைய ரிப்போட்ஸ்ல்லாம் பாக்குறேன் ரியலி குட்.
சரி உனக்கு மேனஜரா பதவி உயர்வு கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்,ஆனாஅதே பிராஞ்சுல இல்ல. டிரான்ஸ்பர் இருக்கும்.ஓகேயா
.கே சார் நீங்க நல்லதுதான் செய்வீங்க.
.கே கோபால் அப்புறம் பேசுவோம். தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எந்த ஊரோஎன்னவோசரி கல்யாணத்துக்குள்ளே மேனேஜர் ஆகுறது நல்லதுதான்.யோசித்து கொண்டே ஸ்டாப் ரூமுக்கு சென்றான்.

ஜோயிஇங்கே என்ன பண்றே?
கோபாலை பார்த்தவுடன்,ஜோயி படித்துக் கொண்டிருந்த லெட்டரை மறைத்தான்.
ஜோயி என்ன மறைக்கிறெ கொடுகொடு பாப்போம்.
சார்சார்ஒன்னுமில்லை சார்ஒன்னுமில்லை.
ஜோயி கொடுக்கப்போறியா இல்லையா?
இல்லை சார் கொடுக்க முடியாதுசீக்ரட்
முட்டாள்அடுத்தவங்க லெட்டரை படிக்கிறது தப்புகொடு இப்படி
பளார்என்று கன்னத்தில் அறைந்தான்.
ஜோயி தடுமாறினான்
இன்னிக்கு எனக்கு லெட்டர் வரலைங்கிற போதே சந்தேகம் வந்தது,
திருட்டுப் பயலே லெட்டரை கொடுடாகோபால் கையை ஓங்கினான் மீண்டும்.
யோவ்நிறுத்து இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்ல.
உனக்கு மட்டும் தான் காதலாஎன்று கூறி ஜோயி தனது காதலியின் கடிதத்தை விரித்து காண்பித்தான்.
கோபால் ஜோயியை கட்டிப்பிடித்து தட்டி கொடுத்தான்.
காதல் சுகமானது...

Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…