தை… ஒரு கதை

 

தை படித்தேன்அதில் தைச்சொல்லதைச் சொல்லவா? தைச் சொல்லவா
பாவம்பேதையவள் போதை தலைக்கேறி பாதை தடுமாறிப்போனாள். சிதைக்கப்பட்டு சிலையாகிப்போனாள். தைக்கப்பட்டவளாய் வாடிப்போனாள்.

கீதை சொல்கிறது கடமையைச்செய் பலனை எதிர் பார்க்காதே என்று . இராமாயணம் சொன்னது சீதையின் தைரியத்தை . விதையொன்று போட சுரையொன்று முளைக்குமா?.

இவையெல்லாம் ஏட்டில் படிக்க இனபமாய்த்தான் இருக்கும்.

தைக்க ஓடி வருகிறான்தையல் தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருக்கிறாள்.
தைதைத்து திரும்புகிறாள். நத்தை தன் கூட்டில் அடங்குவது போல் முடங்குகிறாள்.
உன்னை மேதையென்று நினைத்தாயோ என்று காதை திருகுகிறான். வித்தைக்காரனைப்போல்
மேலும் கீழும் குதிக்கிறான்.முத்தை மூழ்கி எடுப்பது போல் முகத்தில் விழியை உற்று நோக்குகிறான்;.

சொத்தையெல்லாம் அழித்து விட்டாயே என்று கத்துகிறாள் . அந்த அத்தை மகள் மெத்தையிலே சின்ன செத்தையைப் போல் சென்று சரிகிறாள். கத்தை கத்தையாக எத்தனை செலவு செய்தேன் உனக்காக என்று அரட்டுகிறாள். கண்டதை கவரும் கள்வன் என்று தெரியாமல் போனது . தொட்டதை விட்டவனும் கெட்டதை தொட்டவனும் உருப்பட்டதில்லை . எங்காவது ஒளிந்து போ என்றாள் .

வருவதை அறியாது செலவு செய்தாய் தருவதை சேமிக்க தவறிவிட்டாய் . நாம் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது. என் நெஞ்சில் எரிவதை எப்படி நான் சொல்வேன் என்றான்.
முறத்தைக் கொண்டு புலியை விரட்டியத்த வீர தமிழகத்தை சேர்ந்த தாய்தானே உன்னைப் பெற்றெடுத்தாள். உன் கரத்தை பிடித்த இது நாள் வரை எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பேன்.
உன் நிறத்தை கண்டு மயங்கிவிட்டேன். அப்போது மனதைக் காண மறந்துவிட்டேன்.;

வானத்தையே கண்டு நடந்த நான்; அவமானத்தை நினைத்து பூமியைக் கண்டு நடக்கிறேன். தானத்தை தாராளமாக வழங்கினேன். அது தவறென்று சொல்கிறாய். பாவத்தை போக்க தைவிட வேறு என்ன இருக்கிறது. சோகத்தை சுமந்து திரிகிறேன் . என் தாகத்தை நீ கண்டு கொள்ளவில்லையே . மேகத்தைப் போல அழுகிறேன்நாம் பிரிவதை நினைத்து. என்றான்.

கந்தையாகிப் போனால் மாதர் கட்டுவதில்லை. இதில் விந்தையென்ன இருக்கிறது நீ என்னை விட்டு விலகிச் செல்ல நினைப்பதிலே. பாகத்தைப் பிரித்து கொடு என்று பக்குவமாய் கேட்டாயே என் தந்தையிடம். நாகத்தை விட கொடிய நயவஞ்சகன் நீயல்லவா! . உன் வியூகத்தை நானறிவேன் . உன் விவேகத்தை நீயே கொன்றுவிட்டாய். வேகத்தை குறைத்துவிட்டு நிதானத்தை கடைப்பிடித்துப் பார் அப்போது தெரியும் அத்தனையும் நீதான் பித்தனைப் போல் செய்தாயென்று. பதிலடி கொடுத்து பந்தெனப் பாய்ந்தாள்.

நானத்தை விட்டு உன்னை நாடி வந்தேனே . பானத்தை ஏற்ற பறவையானேனே. மனத்தில் ஊனத்தை ஊடுருவ செய்துவிட்டாயே!. உள்ளதை உள்ளபடி உரைத்திருந்தால் உணர்வில் உன்னோடு சேர்ந்து நானும் கலந்திருப்பேன். தாரத்தை புரிந்து கொள்ள தகுதியில்லா உனக்கு உன் வீரத்தை காட்டும் மீசையெதுக்கு. பாரத்தை சுமப்பவனே மனிதன் அதில் வாழ்க்கை தூரத்தை காணாது வாழ வேண்டும் . தர்க்கத்தை விட்டுவிடு வாழ்வில் சொர்க்கத்தை காண வழிவகுக்கும். என் கோலத்தை பார்த்தாயா இன்று இதற்கு நான் என்றும் காலத்தை குறை சொல்ல மாட்டேன். காதலென்று சொல்லி கண் மூடி நடந்து வந்து காலம் கடந்து விட்டது. விழித்து பார்க்கையில் படுபாதாளம் . விளிம்பில் இருக்கும் என்னை உன் விரல் நீட்டி தள்ள தவமிருக்கிறது. உரத்தை போட்டு ஒரு மரத்தை நட்டாலும் பிறருக்கு பலன் கொடுத்திருக்கும் இந்நேரம். புத்தகத்தை புரட்டிப்பார்க்காத உனக்கு என் ஜாதகத்தை பார்க்க வேண்டுமா?. வேண்டாம் காலம் கடந்துவிட்டது. கறாராகப் பேசினாள்.

வெட்டியதை ஒட்டினாலும் ஒட்டியதை வெட்டினாலும் தழும்புகள் மறைவதில்லை. ஈரத்தைக்கண்டு எருமை அஞ்சாது. காரத்தை இழந்தாலும் மிளகாய் பெயர் மாறுமா? ஆனாலும் நீ பேசுவதைக் கேட்கையிலே நான் ஆடாவிட்டாலும் என் தை ஆடுகிறது. தடுமாற்றத்தை தவிடு பொடியாக்கி உன்னுள் மாற்றத்தைக் கொண்டு வா . ஏமாற்றத்தை எங்காவது ஒளித்து விடு . முன்னோர்கள் வாழ்ந்ததை நினைத்துப்பார். சொந்தத்தையும் பந்தத்தையும் எப்படி அனைத்து சென்றார்கள். வார்த்தைகளால் மட்டும் வாழ்ந்துவிட முடியாது. மற்றதையெல்லாம் ஒருவன் மறந்தாலும் தான் கற்றதை யாராலும் மறக்க முடியாது. தான் விற்றதை அதிக விலை கொடுத்து வாங்கலாமா! . புத்திசாலியாய் இரு என்று தான் சொல்கிறேன் . இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது ,அவன் எடுப்பதை யாராலும் மறுக்க முடியாது. இறைவன் விட்ட வழி நாமாக ஏன் பிரிய வேண்டும் . என்றான்.

பாதை தடுமாறி போதை தலைக்கேறி வந்து வாழ்ந்தும் இன்னும் யார் யாரை திருத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளோம் . உள்ளத்தை பகிர்ந்து கொண்டால் அன்பு வெள்ளத்தைப் போல் பெருக்கெடுக்கும் . அது வாழ்க்கைக்கு நல்ல உருகொடுக்கும் .
வாழ்வில் சேதத்தை பற்றி சிந்தியாது வாழ்வின் மீதத்தை பற்றி சிந்தித்திரு. சரிநடந்ததை மறப்போம் இருப்பதைக் கொண்டு வாழ்வில் நடப்பதை ரசிப்போம். என்றாள்

ஆகாதூக்கத்துல தை படிச்சிருக்கோமாநாளைக்கு தை ஒன்னுல்ல ஊருக்கு போகனும்லன்னு அவசரஅவசரமா எழுந்தேன்.

Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…