சிரிக்காதே…குருத்தோலை…
நரையோலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம் …நம்ம கிராமத்துல இப்படி ஒரு பழமொழியை அடிக்கடி சொல்வாங்க …நம்ம பெரியவங்க… ஆமாம் இன்னும் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது நம் குருத்தோலைகள்.
வாலிப பருவம் வயோதிகருக்கு நன்றாக தெரிந்திருக்கும் ஆனா வயோதிக பருவம் வாலிபருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அம்மாவுக்கு வயது 80 ஜ தாண்டியிருந்தது . அவளுக்கு 50 வயது ஆகும் போதே அப்பா இறந்துவிடடார்.
முப்பது வருட காலம் ஒடி விட்டது …சென்னையிலும் …கோவையிலும் கடைசி மகன் வீட்டில் காலத்தை கடத்தி விட்டாள்.
வயது 85 ஆனாலும் ப்ரசரோ …சுகரோ எதுவும் இல்லை…ஒரு கண் மட்டும் சரியா தெரியலை.
மாதவன் ஒரு தடவை அம்மாவை பாக்க கோவை சென்றிருந்தான்.
மாதவா… எனக்கு இந்த இடது கண் சரியா தெரியலை …சில நேரங்கள்ல இந்த ரூமுக்குள்ளே பேகாறேன்னு …சுவர்ல முட்டிக்கிறேன் . இங்கே தம்பிக்கும் மருமகளுக்கும் என்னை டாக்டர்ட்டே கூட்டிப்போக நேரம் கிடைக்கலை. அதனாலே நீ தான் எனக்கு இந்த கண்ணை சரிபண்ணி கொடுக்கனும். வர்ற ஏப்ரல் - மேயிலே மதுரைக்கு வர்றேன்.
சரிம்மா…என்றான் மாதவன்.
அம்மா சொன்னபடி மே மாதம் வந்தாள் …கண் இப்போது இன்னும் கொஞ்சம் மோசமாக இருந்தது.
மாதவன் …குட்செட் தெருவிலுள்ள ராமசந்திரா கண்மருத்துவமனைக்கு கூட்டி சென்றான்.
டாக்டர் அம்மாவின் கண்களை பரிசோதித்தார்…
ஆப்ரேசன் பண்ணனும்மா…பண்ணிடலாமா? …இல்லை தற்சமயம் மருந்து எழுதி தரவா…நல்லா கேட்டுக்குங்க. ஆபரேசன் பண்ணலைன்னா கண்ணுல உள்ள இந்த புரை எப்ப வேணாலும் உடையலாம் . ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். பாத்துக்கோங்க…
அம்மா …மாதவனைப் பார்த்தாள்…
ஆப்ரேசன் பண்ணிடலாம் டாக்டர் என்றான் மாதவன்.
சரி …அப்படின்னா எதுக்கே உள்ள கட்டடத்துல போயி இந்த பேப்பரை கொடுங்க என்றார்.
மாதவன் அம்மாவை அழைத்து சென்றான்.
லட்சுமி யாரு…
எழுந்து சென்றான் மாதவன்
கூட வந்திருக்கீங்களா…அவங்களை கூட்டி வாங்க…
இருவரும் நாற்காலியில் அமர்ந்தனர்
இங்கே பாருங்க சார்…லென்ஸ் இம்போர்ட்டடு லென்ஸ்…நாங்க மூணு விதமா வச்சுருக்கோம் …இந்த லென்ஸ் போட்டீங்கன்னா 15000
ரூபாய்…இந்த லென்ஸ் போட்டீங்கன்னா 25000 ரூபாய்…இந்த லென்ஸ் போட்டீங்கன்னா 45000
ரூபாய்.
என்னம்மா…45000 ரூபாய் லென்ஸ் போட்டுடுவோமா? மாதவன் கேட்டான்.
வேணாம்ப்பா…அந்த 25000 ரூபாய் லென்சே போதும். 25000ம் ரூபாய் என்பது லென்சுக்கு மட்டுமல்ல மொத்த ஆப்ரேசனுக்கும் சேத்துதான்.
பேப்பர்களில் கையெழுத்து போட சொன்னார்கள் . அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஆப்ரேசனுக்காக தேதி கொடுத்தார்கள்.
ஆப்ரேசனுக்கு இரண்டு தினங்களுக்கு முனனிலிருந்து தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சொட்டுமருந்து விடச்சொன்னார்கள்.
காலை 9 மணிக்கு கண் ஆபரேசன். 8.45க்கு ஹாஸ்பிடலில்
அம்மாவுக்கு கொஞ்சம் கூட பதட்டம் இல்லை . மாறாக பார்வை கிடைக்கப் போகிறது என்ற சந்தோசம் கண்களில் தெரிந்தது.
லட்சுமி வாங்க…
அம்மா எழுந்து சென்றாள்
நீங்கள்லாம் இங்கேயே இருங்க
லட்சுமி கூட வந்தவங்க இங்கே வாங்க…
சார் …மீத பணத்தை கட்டுங்க சார்
மாதவன் பணத்தை கட்டினான்
ரசீது கேட்டான்
நாளை வந்து வாங்கிக்குங்க சார்
பதினைந்து நிமிடம் கழித்து அம்மாவை வெளியில் அழைத்து வந்தார்கள்.
அம்மா ஹெல்த்தெ நல்லா மெயின்ட்டேன் பண்ணியிருக்காங்க…இந்த வயசுலேயும் சுகர் பிரசர் எதுவும் இல்லை…என்று அம்மாவின் முதுகில்; தட்டி டாக்டர் பாராட்டினார்.
அம்மாவுக்கு பெருமையாக இருந்தது.
மறு நாளே கட்டு அவிழ்க்கப்பட்டது. ஒரு வாரத்தில் கண் நன்கு பழக்கப்பட்டது .
இப்போது அம்மாவுக்கு கண் நன்றாக தெரிகிறது. புதினைந்து நாள் ஓய்வில் இருந்து விட்டு கோவை புறப்பட்டு சென்றாள்.
சுpல தினங்களில் போன் வந்தது .
அம்மாவுக்கு உடல் நலமில்லை ..தம்பி பேசினான்
வைத்தியம் பாத்துக்கிட்டு இருக்கோம்
இங்கெ கூட்டி வந்திரு…இங்கே வைத்தியம் பாக்கலாம். மாதவன் சொன்னான்.
கொஞ்சநாள் பாத்துக்கிறோம் …சரியாகலைன்னா அங்கெதான் வரனும்.
என்ன வைத்தியம் பார்த்தும் அம்மாவுக்கு குணமாகவில்லை.
அம்மா மறுபடியும் மாதவனிடம் வந்தாள்.
யாரோ சொன்னார்கள் …அம்மாவை வயசான காலத்துல அலோபதி டெஸ்ட்ல்லாம் எடுத்து கஷ்டப் படுத்த வேண்டாம் . ஹோமியோ மருந்த கொடுக்கலாம் என்றார்கள்.
மூண்று மாதம் ஹோமியோ மருந்து எடுத்தும் குணமாகவில்லை …ஆனால் நோய் கட்டுப்பட்டது. மருத்துவர் ஸ்கேன் எடுக்க சொன்னார். இறுதியில் இரைப்பையில் கேன்சர் என்பது தெரிய வந்தது.
டாக்டர் சொன்னார் அட்வான்ஸ்டு ஸ்டேஜ் அம்மா அதிகபட்சம் ஆறு மாசம் இருப்பார்கள் என்றார்.
மாதவனுக்கு வருத்தமாக இருந்தது. அனைவருமெ வருத்தப்பட்டார்கள்.
அம்மாவிடம் …உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கிறதாம் டாக்டர் சொன்னார். நோய் சரியாக கொஞ்சம் நாளாகுமாம். பயப்படாமெ இருக்க சொன்னார் என்றோம்.
வயசாகிருச்சுல்ல …என்று எங்களுக்கு ஆறுதல் சொன்னாள்.
சொந்தங்கள் அனைவருக்கும் அம்மாவுக்கு கேன்சர் என்பது தெரியும் .ஆனா அம்மாவுக்கு மட்டும் தெரியாது.
வரும் சொந்தங்களிடமும் அம்மாவுக்கு நோய் பற்றிய உண்மை தெரியாது என்ற உண்மையை சொல்லிவிடுவோம். அம்மாவுக்கே ஒரு முறை சந்தேகம் வந்தது …கேட்டாள் …ஏம்ப்பா…மாமாவுக்கு மாதிரி கேன்சரா இருக்குமோ?.
அப்படின்னா …டாக்டர் சொல்லியிருப்பார்ல்ல என்று மாதவன் சமாளித்தான்.
மாதவனுக்கு அம்மா ரொம்ப பிடிக்கும்…அம்மாவிடம் பேசும் போது எப்போதும் கேலி கிண்டலோடு தான் பேசுவான். அது அம்மாவுக்கு சில சமயங்களில் பிடிக்காது . கடுமையாக திட்டிவிடுவாள்.
அதே பழக்கத்தில் இப்போதும் மாதவன் சில சமயங்களில் பேசுவான்…அம்மாவுக்கு கோபம் வரும். மாதவன் அம்மாவை பழைய அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான்.
அவளின் அவஸ்தை …உடல் குறைந்து எலும்பும் தோலுமாக தோற்றம்…நடக்க கூட முடியாத நிலை…உயிருக்கும் உடலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும் என்பதெல்லாம் மாதவனுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனாலும் அம்மாவை நன்றாக கவனித்து வந்தான்.
ஒருநாள் குளியலறையில் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்தது. உள்ளே அம்மா இருந்தாள்.
அம்மா…அம்மா…மாதவன் அழைத்தான்.
என்னப்பா…
தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது…சிறிது நேரம் கழித்து
அம்மா…அம்மா…
எந்த சத்தமும் இல்லை…தண்ணீர் ஓடிக்காண்டே இருந்தது.
பலமாக கத்தினான் மாதவன் …அம்மா…அம்மா
பதில் இல்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது. பலம் கொண்டமட்டும் ஓங்கி இடித்தான். கதவு திறந்தது அதிர்ஷடவசமாக.
அம்மா மயங்கிய நிலையில் சரிந்து கிடந்தாள்.
வெளியில் தூக்கிவந்தான் மாதவன்.
அலறல் சத்தத்தில் வீட்டில் கூட்டம் கூடியது . 108க்கு போன் செய்தான் …முதலுதவி செய்தார்கள்.
பத்தே நிமிடத்தில் 108 வந்தது.
அருகில் உள்ள பிஜிஎம் ஹாஸ்பிட்டல் சென்றோம். ஸ்ட்ரெச்சரில் எடுத்து சென்றார்கள்…அம்மா அசையாமல் படுத்திருந்தாள்.
ஏந்த மருத்துவத்தால் அம்மா கஷ்டப்பட கூடாது என்று நினைத்தோமோ அதற்கே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
டாக்டர் நோயின் வரலாறு கேட்டறிந்தார்… ஹோமியோ மருத்துவம் பார்த்தோம் என்றவுடன் டாக்டருக்கு கோபம் வந்தது. நீண்ட விவாதத்துக்கு பின்பு அவர் ஸ்கேன் செய்ய அனுப்பினார். ஸ்கேன் செய்து வர இரவு 12 மணி ஆனது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கவும் அம்மாவின் உடல் நிலை தேறிவந்தது.
டாக்டர் , அம்மாவின் உடல் நலம் பரவாயில்லை …நாளை வீட்டுக்கு கூட்டி செல்லலாம் என்றார்.
வீட்டிற்கு வந்த பதினைந்து நாளில் மீண்டும் உடல் நிலை மோசமானது. 108 அழைத்து அதே மருத்துவமனை அழைத்து சென்றான் மாதவன். ஸ்கேன் செய்யவேண்டும் என்றார்கள் . பின் அதே நாளில் வயிற்றில் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
நள்ளிரவு ஆபரேசன் நடந்தது …காலையில் அம்மா குட்மார்னிங் சொல்லிக் கொண்டே ஆபரேசன் தியேட்டர்ல்ல இருந்து வெளியில் வந்தாள்.
ஐந்தாவது நாள் பல்ஸ் குறைந்தது . ஐசியுக்குள் வைத்து டூட்டி டாக்டர் சொன்னார்…இதுக்கு மேலே ஒன்னும் செய்ய முடியாது . வீட்டுக்கு கூட்டி போயிடுங்க .
வீட்டில் 4.30 மணியயளவில் அம்மா எங்களைவிட்டு பிரிந்தாள்.
பிரிவுதான் அதிக உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
வயோதிகரும் …உடல் நலமில்லா வயோதிகரும் பலவீனமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் பக்கபலமா இருக்க வேண்டும் . பக்கபலமாக இருந்தால் மட்டும் போதாது பக்குவமாக பேசவேண்டும். மனதாலும் உடலாலும் என்னென்ன அவஸ்தை படுவார்கள் என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர வேண்டும். முதியவரை போற்றுவோம் …முடிந்தவரை பணியாற்றுவோம். குருத்தோலை விரைவில் நரையோலையாகும்.
Comments
Post a Comment