சகலை செஞ்ச ரகளை…

 அம்மாவுக்கு முடியலைபடுத்த படுக்கையா இருக்காங்க. மாதவன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகனும். காஞ்சனா தனது ரெண்டாவது பொண்ணோட டெலிவரியை எதிர் பாத்துக்கிட்டு இருக்கா. இப்பதான் செக்கப் போயிட்டு வந்தாஇன்னும் ஒரு வாரம் ஆகுமாம் குழந்தை பிறக்க. அம்மா லேசாக கண்விழித்து காஞ்சனாவை அமரச் சொல்லி சைகை செய்தாள்.அருகில் அமர்ந்து , அம்மாவின் கையை தொட்டுப்பார்த்தாள். காய்ச்சல் நெருப்பாக கொதித்தது.


அக்கா கொஞ்ச நேரம் இருந்து அம்மாவை பாத்துக்கோங்கநான் இவளெ ஹாஸ்பிட்டல் வரை கூட்டிப் பொயிட்டு வர்றேன்.
சரி போயிட்டு வா

இருட்டத் தொடங்கிவிட்டது. ரிசப்சனில் பேர் கொடுத்து இருக்கையில் அமர்ந்தோம். டாக்டர் இன்னும் வரலையாம்.

எத்தனாவது ஆளா போகனும்

மூணாவது ஆளா போங்க

அரைமணிநேரம் கழிச்சு உள்ளே போயி விசயத்தை சொல்லி, மருந்து எழுதி வாங்கி , மருந்தை வாங்கிக்கொண்டு வெளியில் வந்து வேறொரு லேபரேட்டரி சென்று ப்ளட் டெஸ்ட் எடுத்து வீடு வந்து சேர மணி ஒன்பது ஆகிவிட்டது. ஒரு தடவை ஆஸ்பத்திரின்னு போயாச்சுன்னா ஆயிரம் ரூபாய்க்கு செலவு வச்சுருது. அதனாலே தான் பெரியவங்க சொன்னாங்க நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு.

அம்மாவை சுத்தி எல்லோரும் உக்காந்திருந்தாங்க . வீட்டிற்குள் நுழையும் போதே சீனாதானா கேட்டார் . என்னடாஅம்மாவுக்கு காச்சல் அடிக்குது , அவங்களெ தனியா விட்டுட்டு எங்கே போனே? .
காய்ச்சல் அடிக்குதுன்னு எல்லோரும் சுத்தி நின்னு வேடிக்கை பாத்தா போதும்மா எல்லோரும் சேர்ந்து காச்சலை திருப்பி அடிச்சு விரட்ட வேண்டியது தானே என்று மாதவன் வேடிக்கையாக பதில் சொன்னான்.
வா..உனக்காக தான் காத்திருக்கிறோம் நீயே வந்து அடிச்சு விரட்டு என்று சீனாதானா பதில் சொன்னார்.

அம்மாகாச்சலில் புலம்பினால்கையை தொட்டுப்பார்த்தான் மாதவன் முன்ன விட காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஒரு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு , இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் காய்ச்சல் சரியாகும் என்றான் அதே போல் அரை மணி நேரத்தில் அம்மா எழுந்து உட்கார்ந்தாள்.
திவாகரன் குடும்பம் எழுந்து சென்றது. சீனாதானா குடும்பமும் காஞ்சனாவும் இருந்தார்கள்.

கதிசேன் வரப்போறானாம்அம்மாவை பாக்கஅவன் காஞ்சனாவுக்கு மருமகன் .மாதவனுக்கு சகலை. சகலை வர்றான்னு மாதவனுக்கு ரொம்ப சந்தோசம் . அம்மாவுககும்; கதிரேசனுக்கும் ஒரு தடவை ஒரு சின்னப்பையன் விசயத்துல ஒரு பெரிய சண்டையே நடந்துச்சு . தப்பு கதிரேசன் மேலேதான் பழசையெல்லாம் மறந்து பாக்க வர்றானேன்னு ரொம்ப சந்தோசம்.
ஆனா மத்தவங்க முகத்தில ஒரு இறுக்கம் தென்பட்டது . அது ஏன் என்று தெரியவில்லை.

வாசலில்பைக் சத்தம் கேட்டது .

வாகதிரேசாநல்லாயிருக்கியா

நல்லாருக்கேன் சார்

கதிரேசன் அவன் மன நிலைக்கு தகுந்த மாதிரி பதில் சொல்வான். சுகந்தி எத்தனையோ தடவை சொல்லிப் பாத்துட்டாசார்ன்னு கூப்பிடாதே அண்ணன்னு கூப்பிடுன்னு. காதில வாங்குறதில்ல.
வந்து அம்மா பக்கத்தில் போய் அமர்ந்தான். பாட்டி எப்படி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேம்ப்பாநீங்க எப்படி இருக்கீங்க என்று விசாரித்தாள் அம்மா.

நல்லா இருக்கேன் பாட்டி.

சரிப்பா

கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான். சீனாதானாவும் அவர் மனைவியும் வாய்திறக்கவில்லை. கதிரேசனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை.

மாதவனும் சகலையும் மனம்விட்டுப் பேசினர். சகலையின் பேச்சு மாதவனை மட்டம் தட்டுவதாகவே இருந்தது. மாதவனுக்கு சகிப்புத்தன்மை அதிகம் .

அம்மாவுக்கு காய்ச்சல் சுத்தமாக போய்விட்டது. அனைவரிடமும் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

சீனாதானா குடும்பம் அனைவரிடமும் விடை பெற்று சென்றது. கதிரேசனை கண்டு கொள்ளவில்லை.

கதிரேசன் சுகந்தியிடம் பிரச்னையை ஆரம்பித்தான் . சுகந்தி நிறைமாத கர்ப்பிணி அவளிடம் போய் பிரச்னை செய்கிறான் .

சீனாதானாவை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த போது சுகந்தியும் கதிரேசனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

என்ன என்று கேட்டான் மாதவன்.

ஒன்னும் இல்லை என்று சமாளித்தான் கதிரேசன்.

சுகந்தி விசயத்தை சொன்னாள்.

கதிரேசன் கத்தினான். என்னைப்பார்த்தால் எல்லோருக்கும் எப்படி தோன்றுகிறது. நான் வர்றேன்னு தெரிஞ்சவுடனே திவாகரன் குடும்பம் எழுந்து போயிருச்சு . சீனாதானா குடும்பம் வான்னு கூட கேக்கலை. ஒரு ஹாய் ஹலோ கூட கிடையாதா? நான் என்ன சொத்தையா எழுதி கேக்குறேன்.என்று தனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசினான்.

கோபம் வரும் போது சிலர் அன்னிய மொழியில் பேசுவது இயல்பு.

மாதவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது . கதிரேசா ! நீ என் வீட்டுக்கு வந்திருக்கே நான் உன்னோடு சரியா பேசலைன்னா தான் உனக்கு கோபம் வரணும் . அவங்களும் உன்னைப்பொல வந்தவங்க தான் . அவங்க பேசலைன்னு நீ கோபப் படுறதில்ல அர்த்தம் இல்லை.
நீ கல்யாணம் முடிச்சு மூணு வருசமாச்சு . உன் மனைவி சுகந்தியை உன்னுடைய வீட்டுக்கு அழைச்சுட்டு போயி அப்பா அம்மாகிட்டெ அறிமுகப்படுத்தினீயா? .இதுவரை இல்லை , எத்தனையோ தடவை உனக்கு எடுத்து சொல்லியாச்சுஉன்னோட இவ்வளவு தூரம் நாங்கள்ல்லாம் பேசுறோம்னா அதை நினைச்சு சந்தோசப்படு. வீட்டுக்கு தெரிஞ்சுதான் கல்யாணம் செய்தேன்னு சொல்றே , அப்ப வீட்டுக்கு கூட்டிப்போறதுல்ல உனக்கு என்ன கஷ்டம்.

பாருஎதோட எதுக்கு முடிச்சு போடுறார்ன்னு. கதிரேசன் கத்தினான்
பேசுன்னா எல்லாம் பேச வேண்டி வரும் மாதவன் சொன்னான். நீ செய்றதல்லாம் நியாயம் மத்தவன் செய்றது அநியாயமா? மொதல்ல நீ ஒழுங்கா நடந்துக்கிற பாருஅப்புறம் மத்தவங்க குறைகளை சொல்லு . காதல் கல்யாணம் பண்றது இயல்பு. கல்யாணம் பண்ணிட்டு தில்லா வீட்டுக்கு கூட்டிப்போறது தான் அழகு. அதை விட்டுட்டு முரண்பாடான்ன வாழ்க்கை வாழ்ற ஒனக்கு இவ்வளவு தான் மரியாதை கொடுப்பாங்க தெரிஞ்சுக்கோ என்றான். குடும்பத்துல புகுந்து அப்பப்ப கலவரம் பண்ண நெனைச்சே உன் பொண்டாட்டிகிட்டே இருந்து கூட மரியாதை கெடைக்காது. புரிஞ்சு நடந்துக்கோ.

சகலை விருட்டென்று எழுந்து வெளியில் ஓடினான். அவன் குணம் அப்படி வெளியில் சென்று வேக வேகமாக தம்மடிப்பான்.
சுகந்தியையும் காஞ்சனாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தான் மாதவன்.

சகலை சத்தமில்லாமல் ஆட்டோவைப் பின் தொடர்ந்தான்.

சகலையின் அர்த்தமில்லாத ரகளை மாதவனின் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.

Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…