எது பக்தி…

 வீட்ல லட்சுமி குடியிருக்குதுபெண் தெய்வம் காக்குதுதர்ம பிரபுவுக்கு ஒரு குறையும் வராதுஉன் வீட்ல ஒரு குறையும் இல்லை. சாமி வீடு தேடி வந்துருக்குதர்மம் காக்குதுநான் வணங்குற சாமி சத்தியமா சொல்றேன் நல்லா இருப்பேசாமிக்கு ஒரு தர்மம் கொடு சாமி. புன்னியவான் வீடு தேடி வந்திருக்கு தர்மம் கொடு சாமிவாசலில் ஒரே சத்தம்.

மாதவன் பல்துலக்கி கொண்டிருந்தான் . வாசலில் இருந்து தொடர்ந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. சீக்கிரம் முடித்துவிட்டு சட்டையை மாட்டி சில்லரை காசு ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

வாசலில் கருப்பு வேஷ்டியும் கருப்பு சட்டையும் கழுத்தில் நிறைய பாசிகளையும் அணிந்து கொண்டு கையில் உண்டியலுடன் வாசலில் 30 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

படியிலிறங்கி சென்று பவ்யமாக ஒரு ரூபாயை உண்டியலில் போட்டான் மாதவன் .
அதுவரை அமைதியாக இருந்த () சாமி பேச ஆரம்பித்தார்.

சாமியாரு வீட்டு வாசல்லேயும் நான் நின்னு பேசினது கிடையாது . உன் வீட்டு வாசல்லதான் நின்னு பேசுறேன் . உன் குடும்பத்தை சாராத குழந்தை பிறந்த வீடு , சடங்கு வீடு , துக்க வீடு இந்த மூணு வீட்டுக்கும் போகாதே அது உனக்கும் உன் சாமிக்கும் ஆகாது . நான் உன் சகோதரன் மாதிரி சொல்றேன் . என்ன சாமி சொல்லலாம்ல்ல. கேட்டான்

மாதவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவன் தலை லேசாக அசைந்தது.

கூட்டு சேராதேயாருடைய கடனுக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதேயாருகிட்டையும் ஜோசியம பாக்காதேநீ ஜோசியம் பாக்கமாட்டெநெத்தி நிறையா பட்டையெ அடிச்சுக்கிட்டு வெளிப்படையா பக்தியை காட்டமாட்டேமனசுக்குள்ளே பக்தி நிறைய இருக்கு . தெய்வம் துணை நிக்குது. என்ன சாமி நான் சொல்றது

மாதவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக நின்றான்.

சாமி ... நாங்க சாமிகல்லா சேர்ந்து முருகன் கோயில்ல வழிபாடு நடத்துவோம் அதுக்காக உன்னால இயன்றது கொடு சாமி.

அதான் ஒரு ரூபா கொடுத்தேன்லமாதவன் சொன்னான்.
சாமிஅது நீ கொடுத்த காணிக்கை சாமிமுருகனுக்கு வெளக்கு போடவும் சாமி ஒரு நேரம் சாப்பிடவும் ஏதாவது கொடு சாமி.

மாதவன் மனசு கேட்காமல் மறுபடியும் வீட்டுக்குள் சென்று 5 ரூபாய் எடுத்து வந்து கொடுத்தான்.

சாமிஇது போதாது முப்பது ரூபாய் கொடு சாமி .

5 ருபாய் வேணா தர்றேன்முப்பது ரூபாய்ல்லாம் கொடுக்க முடியாது என்றான். மாதவன்

மாதவன் கையில் வைத்திருந்த 5 ரூபாயை வேகமாக வாங்கிக் கொண்டுநல்ல பக்திஎன்று கூறிக்கொண்டே நடையைக்கட்டினான்.

மாதவன் அவனைக்கூப்பிட்டு முப்பது ரூபாய் தருகிறேன் 5 ரூபாயை கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிக்கொண்டு ஒன்றும் கொடுக்காமல் விரட்டி விடலாம் என்று நினைத்தான் . ஆனால் மனம் இடங்கொடுக்கவில்லை. எது பக்தி அவன் வேசம் போட்டு ஏமாற்றுவது பக்தியா? பக்தனைப் போல் வருபவனுக்கு மரியாதை கொடுத்து ஏமாறுவது பக்தியா?.

Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…