அப்பாவா...தாத்தாவா...

 சுமார் 18 வருடங்களுக்கு முன் அமர்நாத் மாடியில் ஜன்னல் அருகே அமர்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ரோட்டை வேடிக்கை பார்ப்பது போலத்தான் தோன்றும் ஆனால் குடோனில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளவே அப்படி அமர்ந்திருப்பார்.

தவிட்டு சந்தை , திரௌபதியம்மன் கோவில் வீதி களைகட்டியிருந்தது.காய் கறி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்கி கொண்டிருந்தனர். தெற்குமாரட் வீதியும் மஞ்சனக்கார தெருவும் லாரி ஆபீசுகள் நிறைந்திருக்கும் பகுதி. வளையல் காரத்தெரு மற்றும் அதை சுற்றி உள்ள கடை வாசலில் சரக்குகளை இறக்கி வைத்து விட்டு லாரிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

லாரி டிரைவரும் சுமட்டு தொழிலாளிகளும் பரபரப்பாக திரிந்தனர் . சேல்ட்டாக்ஸ் வாகனம் சுற்றி சுற்றி வந்தது. மார்வாடிப் பையன்கள் கடையைத் திறந்து சரக்குகளை உள்ளே எடுத்து வைத்தனர் . இது வழக்கமாக நடக்கும் விசயம்தான் அந்தப்பகுதியில். பொழுதுவிடிவதற்குள் சரக்கை இறக்கி அந்தந்த கடைகளுக்கு சென்று சேர்த்துவிட வேண்டும் , இதற்காகவே லாரி ஆபிசுகளில் இரவு வேலைக்கென்று ஆட்கள் தயாராக இருப்பர்hகள் . அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் வருமானம் அதிகம். மார்வாடி கடைக்காரர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல மரியாதை இருக்கும் . ஏனென்றால் அவர்களுக்கு வரும் சரக்கின் விபரங்களெல்லாம் இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் . மற்ற அலுவலர்களெல்லாம் ஒன்பது ஒன்பதரை மணிக்கு ஆபீசுக்குள் நுழைவார்கள்.

அமர்நாத் மெதுவாக மூண்றாவது மாடியிலிருந்து இறங்கி இரண்டாவது மாடிக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்து கொள்வார். அமர்நாத்துக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு அவரவர் இடத்துக்கு செல்வர் தாமதமாக வந்து என்ன காரணம் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். அவன் பயந்து போய் கொஞ்ச நேரம் இங்கே நின்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவான். அமர்நாத் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

அமர்நாத்ஜி குட்மார்னிங்சிங் வாயில் எதையோ ஒதுக்கிக் கொண்டெ வந்தான் . உதட்டின் ஓரமாக சிவப்புக்கோடு போட்டிருந்தது. துடைத்துக்கொண்டான். க்யாஹாலுபாம்பே காடி ஆகயா

ஆகயாபையாஆகையாசெக்போஸ்ட்மே மால் பக்கட்லியா

க்யாபோல்றா

ஆமாசிங்குலெட்டர் கொடுத்து அனுப்பிருக்கு. கூப்பிட்டு பேசிட்டேன் . ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டாங்க.

அச்சாபேப்பரை விரித்துப் பார்த்தான் சிங்கு . இன்னிக்கு வீர்சந் மார்க்கெட்டிங் போகனும் .போயி அந்த க்ளைம்மை எப்படியாவது செட்டில் பண்ணிறனும் . மொதலாளி கன்னாபின்னான்னு கத்துறார். அந்த பேப்பரெல்லாம் ரஞ்சனி டேபிள்ல இருக்கு ஆனா ரஞ்சனியை இன்னும் காணலை.

அமர்நாத் இனடர்காமில் அழைத்தார்,

டேய் வாசன்ரஞ்சனி வந்தாச்சா பாரு.
இன்னும் வரலை சார்

லட்கிக்கோ க்யா ஓகயா?

அமர்நாத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.

குச் போலா நஹி ?… சிங் கேட்டான்.

இல்ல சிங்குவேலைக்கு வரும் போது அதை இதை சொல்லி வர்றாங்க , வந்து கொஞ்ச நாளில்லயே மாறிறாங்க. இந்த ரஞ்சனில்லாம் சுத்தமா மாறியாச்சு.

போன் கர்தோ

போன் உட்டாத்தா நஹி ஹைக்யா லட்கி லோக்! செல்போன் ஹேன்ட் பேக் கா அந்தர் ரஹ்ஹி ஓஹி

.டீகே சோடுதோ ஜாயகா. டெலிபோன் மணியடித்தது.

ஹலோசிங் பேசுறேன்

நான் ரஞ்சினியோட மாமா பேசுறேன் . அப்பா இறந்து போயிட்டார் அதனால ரஞ்சினி வரமாட்டா மேனேஜர்கிட்டே சொல்லிடுங்க.

க்யாஅமர்நாத்ஜி ரஞ்சினியோட அப்பா மர்கயா ன்னு சொல்றாங்க.

வீர்சந் மார்க்கெட்டிங் சோட்தோஆஜ் ரஞ்சினி கர் ஜாவோபுறப்படு சிங். அப்படியே மாதவனைக் கூப்பிடு . அவனுக்குத்தான் புதூர் ஏரியா நல்லா தெரியும்.

இன்டர்காம் முனகியது.

மாதவன்நான் சிங்.

சொல்லு சிங்.

ரஞ்சினிக்கு அப்பா இறந்து போச்சு உடனே நீ நானு மேனேஜர் மூணு பேரும் போறதா பிளான் சீக்கிரம் அமர்நாத்ஜி ரூமுக்கு வா.

நமஸ்கார் அமர்நாத்ஜி.

வா மாதவா புதூர் போயிருக்கியா?.

போயிருக்கேன்.

ரஞ்சினி வீடு தெரியுமா?.

வீடு தெரியாது ஆனா இருக்கிற ஏரியா தெரியும்.

எந்த ஏரியா?

கற்பக விநாயகர் காலனி.

அப்படியா?

அப்புறம் என்ன சிங்கு புறப்பட வேண்டியது தானே! கீழே கனகராஜ்ட்டெ விசயத்தை சொல்லிட்டு சீக்கிரம் வா.
மூவரும் ஆளுக்கொரு பைக்கில் புதூர் நோக்கி போய்க்கொண்டிருந்தனர். கோரிப்பாளையம் வந்ததும் அமர்நாத் பைக்கை நிறுத்தினார்.

என்ன அமர்நாத்ஜி ஏன் நின்னுட்டீங்க வெயில் மண்டையைப் பிளக்குது. மாதவாஒரு கூல்ட்ரிங்ஸ் குடிச்சுட்டு போகலாம் மூவரும் கூல்ட்ரிங்ஸ் குடிக்க சிங் பணம் கொடுத்தான்.

புதூர் கற்பக விநாயகர் காலனி இதுதான். மாதவன் சொன்னான்.

பெரிய ஏரியாவா இருக்கே. இதல எப்படி வீடு கண்டு பிடிக்கிறது மாதவா. ஒன்னு செய்யி மாதவா நீ மட்டும் போயி முதல்ல வீட்டை கண்டு பிடி அதுவரைக்கும் நாங்க ரெண்டு பெரும் இங்கெ மாலை வாங்கிக்கிட்டு இருக்கோம். மாலையில்லாமெ எப்படி போறது.

அப்ப ஒன்னு செய்யுங்க சார் நான் வீட்டை கண்டு பிடிச்சதுக்கு அப்புறம் மாலை வாங்கிக்கலாம்.
அதுவும் சரிதான் மாதவாநானும் சிங்கும் இங்கேயே இருக்கோம் .

மாதன் ஒவ்வொரு சந்தாக நுழைந்து ரஞ்சினி பேரையும் அவள் அப்பா பேரையும் சொல்லி கேட்டான் . நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஒரு பெண் வீட்டைக்காட்டினாள்.

அந்த வீடு மிகவும் அமைதியாக இருந்தது . யாரும் அங்கே இறந்து போனதற்கான அடையாளம் ஏதுமில்லை. அந்தப்பெண்ணிடம் ரஞ்சினியின் வீடு தானே இது என்று நன்றாக உறுதி செய்து கொண்டான். ஏங்க அந்தப் பொண்ணு தெற்குமாரட் வீதில ஒரு கம்பெனில வேலை செய்யுது. அவ அப்பா ரயில்வேல்ல வேலை பாக்குறார் சரியாங்க . அந்த வீடுதாங்க இது என்று அடித்து சொன்னாள்.

மாதவன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அமர்நாத் இருக்குமிடம் நோக்கி சென்றான்.

சார்வீடு கண்டு பிடிச்சுட்டேன் . ஆனா அங்கே யாரும் இறந்த மாதிரி தெரியல.

என்னடா இதுஏய் சிங்கு டெலிபோன்ல என்னப்பா சொன்னாங்க. நீ சொன்ன மாதிரி எதுவும் இல்லையாமெஇப்ப என்ன செய்யுறது. சரிவாசிங்கு எதுக்கும் வீட்டுக்குப் போயி பாப்போம் . மாலையும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேணாம். மொதல்ல வீட்டைப் போயி பாப்போம் . மாதவா முன்னால போ.

ரஞ்சினி வீட்டருகில் வேப்பமரத்தடியில் பைக்கை நிறுத்திக் கொண்டிருக்கும் போது அவள் வீட்டுவாசலில் ஆட்டோ வந்து நின்றது . அதில் ரஞ்சினியும் ஒரு பையனும் ஏறி அமர ஆட்டொ வேகமெடுத்தது.
ரஞ்சினிரஞ்சினிமூவரும் அழைத்தனர். ஆட்டோ மறைந்து போனது.

சரி வாசிங்கு வீட்ல போயி விசாரிப்போம் வேறு யாராவது இருக்கலாம்ல. அருகில் சென்ற போது கதவில் பெரிய பூட்டு தொங்கியது. பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

சிங்கு போன்ல கேட்டது சரியில்லையாரஞ்சினி ஏமாத்துறாளாஇறந்தவரெ வேறு எங்காவது வச்சுருக்காங்களா!. சரிஎப்படி இருந்தாலும் ஆபிஸ_க்கு வரணும்லஅமர்நாத் தனக்கு தாமே சமாதானம் செய்து கொண்டார்.
மறு நாள் காலையில் மூவரும் காத்திருந்தனர் ரஞ்சினியின் வருகையை எதிர் பார்த்து. வழக்கம் போல ஒன்றும் நடவாதது போல ஆபீஸ_க்குள் நுழைந்து குட்மார்னிங் சொன்னாள் .

ரஞ்சினி

எஸ்ஸார்

உங்க மாமா போன் செய்து அப்பா இறந்து போயிட்டார்ன்னு சொல்ல நாங்க பதறிப்போயி மூணு பேரும் உங்க வீட்டுக்கு வந்தோம் . அப்பதான் நீ ஆட்டோல ஏறி போறே . கூப்பிட்டு பாத்தோம் திரும்பிக்கூட பாக்கல. என்ன இதெல்லாம். அமர்நாத் அதட்டலாக பேசினார்.

ரஞ்சினியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியதுசார்அப்பா நல்லா இருக்கார் சார்.

அப்போ யாரு இறந்ததுஉங்க மாமா அப்படித்தானே சொன்னார்.

இறந்தது என்னுடைய தாத்தா சார்எங்க மாமாவுக்கு அப்பா. ரஞ்சினி தேம்பி தேம்பி அழுதாள்.

டேய்சிங்குஎல்லாம் உன்னாலேபோன்ல தெளிவா கேக்க வேணாமா!. எங்கே சிங்கு?

சிங்சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டே படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…