யார் சொந்தம்…

தீபாவளி வரப் போகுதுன்னா ஒரு மாசத்துக்கு முன்னாடியே கடைத்தெரு களை கட்டுற மாதிரி எல்லா வீடுகளிலும் அவரவர் பொருளாதார நிலைக்கு தகுந்த மாதிரி களை கட்டும்வெளியூரிலிருந்து குடும்பத்தினர் , நண்பர்கள் வருவது பற்றியும் , புது ஆடைகள் எடுப்பது பற்றியும் , என்ன பலகாரங்கள் செய்யலாம் அல்லது எங்கே வாங்கலாம் என்பது பற்றியும் பலவிதமான ஆலோசனைகள் நடக்கும் . வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்து நண்பர்களிடம் கூட ஆலேசனை செய்வோம் . எந்த கடையில் என்னவிதமான ஆடைகள் புதிதாக வந்திருக்கின்றனஎங்கு விலை குறைவாக கிடைக்கிறது என்று பலவிதமான ஆலோசனைகள் நடக்கும்.

குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்அவர்களுக்கு புத்தாடையும் , பட்டாசும் போதும் …அது தான் தீபாவளிகுடும்பத்தலைவனுக்கு தான் தெரியும் ஒரு தீபாவளியை சந்திக்கனும்னா என்ன பாடு படனும்ன்னு .
சம்பளம் மாதச்செலவுக்கான பட்ஜெட்டுக்கே பற்றாக்குறைதீபாவளி செலவு போனசை வைச்சுத்தான் கொண்டாட முடியும்போனஸ் இல்லாதவர் என்ன செய்யுறது! . கொஞ்சம் கஷ்டம் தான் . போனஸ் உள்ளவர் போனசை கூட்டித்தர சொல்லி போராடலாம் . போனசே இல்லாதவர் என்ன செய்வார்சிறிய அளவில் சொந்த தொழில் செய்பவராய் இருந்தால் அதைவிட கஷ்டம் . முதலிலிருந்து தீபாவளி செலவுக்குன்னு எடுக்க வேண்டியது வரும்தொழில் பாதிக்கும்அலைந்து திரிந்து வீடு வீடாக சென்று தொழில் செய்பவராய் இருந்தால் அதைவிட கஷ்டம் . ஆனால் எப்படியாவது விழாக்களை குடும்பத்தினரிடம் சேர்ந்து கொண்டாடி மகிழ்கின்றனர்அவரவருக்கு தகுந்தாற் போல மகிழ்ச்சியை கொடுக்கிறது இந்தப் பண்டிகைவாழ்க்கையில் ஒரு பிடிப்பு , ஒரு உற்சாகம் , நம்பிக்கை , ஒரு ஆசுவாசம் , இவற்றை கொடுத்து ஒரு புத்துணர்ச்சியையும் புது தெம்பையும் அளிக்கிறது இந்தப் பண்டிகைகள்.

காஞ்சனாவின் வீடு ஏதாவது பண்டிகையென்றால் களை கட்டிவிடும்ஆனால் இந்த தடவை மகன் வரலையாம்.

மகன் வரலை என்றதுமே காஞ்சனாவுக்கு எப்படியோ இருந்தது.
பேத்தியெ பாக்கனும்முனு அவ்வளவு ஆசைஆமா …தீவாளிக்கு தீவாளி தான் வர்றாங்கேஇருக்காதா ஆசை !

காஞ்சனா தீபாவளிக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவதற்கு லிஸ்ட் தயார் செய்து கொண்டிருந்தாள் . மொபைல் ஒலித்தது.

சொல்லு ரேவதி
அக்காஎப்படி இருக்கீக
நல்லா இருக்கேன் …அங்கே எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
இருக்கோம்க்காராகேஷ்க்கு நாளையிலிருந்நு ஸ்கூல் லீவு . அதனாலே தீபாவளிக்கு மூணு நாளைக்கு முன்னாடியே வந்திருவோம்.
எப்பவுமே மூணு நாளைக்கு முன்னாடியே தானே வருவீங்க ஒண்ணும் புதுசு இல்லையே!
என்னனாலும் சொல்லணும்ல்லக்காதிடீர்ன்னு வந்து நிக்க முடியுமா
சரி… வாங்க… ட்ரெஸ்ல்லாம் எடுத்துட்டீங்களா?
எல்லாம் எடுத்தாச்சுக்காஅருண் வர்றாப்லையா
இல்லையாம்அவன் மாமனாருக்கு வைத்தியம் நடக்குதாம் …அதனால விட்டுட்டு வர முடியாதுங்கிறான்.
அருண் மட்டுமாவது வரலாம்ல
முடியாதுங்குறான்என்ன செய்யுறதுராகவி கூட வரலைன்னாஅப்புறம் நான் தான் சத்தம் போட்டு வரச் சொல்லிருக்கேன்.
ராகவி ஏன் வரலையாம் …
வாசுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம் …இப்போ வர்றேன்னு
சொல்லியிருக்கா

சரிக்காஅப்புறம் பேசுறேன்

சரிரேவதி

காஞ்சனா தீபாவளியை எளிமையா கொண்டாடிடலாம்ன்னு நெனைச்சாஆமா மகன் அருண் வரலை , மகள் ராகவி வரலை அப்புறம் என்னத்தை கொண்டாடுறது.

எல்லாத்தையும் விட மக ராகவி ன்னா உசிரு …அவ வராத தீவாளியா!
இப்போ தம்பி பொண்டாட்டி ரேவதி குடும்பத்தோட வர்றேன்னு சொல்லிட்டாஇனி சிம்பிள்லா நினைச்ச மாதிரி கொண்டாட முடியாது.

இப்போது காஞ்சனா போட்டுக் கொண்டிருந்த லிஸ்ட் பெரிதானது.

வீட்டெ சுத்தி உள்ள வேண்டாத புல்லெல்லாம் வெட்டி சுத்தம் செய்தாச்சு
வீடு ஒற்றடை அடிச்சு சுத்தம் செய்தாச்சு
வீட்டில் உள்ள சின்ன சின்ன ப்ளெம்பிங் , எலெக்ட்ரிக்கல் வேலையெல்லாம் செய்து ரிப்பேர் சரி பண்ணியாச்சுரெண்டு நாளைல்ல எல்லா வேலையும் முடிச்சாச்சு.

பப்பியை கட்டி போட்டுட்டு தம்பியின் வருகைக்காக காத்திருந்தாள்காஞ்சனா

மொபைல் ஒலித்தது …அக்காநாங்க பைபாஸ்ல வந்துகிட்டு இருக்கோம்

பாத்து வாங்க

அம்மா கிராமத்துல இருந்து போயி 14 வருஷமாச்சுதம்பி கூடத்தான் இருக்காங்ககிராம வாழ்க்கையை விட நகர வாழ்க்கை ரொம்ப புடிச்சு போச்சாம்ஆரம்ப காலத்துல நகரத்துல இருந்து தானே கிராமத்துக்கு போனாங்கஅப்பா ரிடையர் ஆனதுக்கப்புறம் கிராமத்துக்கு வந்தாங்கஅதனாலே எந்த சூழ்நிலையிலும் அவங்களாலே சமாளிக்க முடியுதுபொங்கல் தீபாவளிக்கு தான் வர்றாங்க . எண்பது வயசை தாண்டியாச்சு யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்கிறதில்லைசுp நேரங்களில் அவங்க பேசுறது மட்டும் என்னவோ எனக்கு பிடிக்கிறதில்லை மக கூட பிரியம்மா இருக்கிற அம்மவே பாக்கும் போதெல்லாம் காஞ்சனாவுக்கு வருத்தமா இருக்கும்.

ஊரு உலகத்தில எல்லா அம்மாவும் பசங்களை விட பிள்ளைக மேலே தான் ரொம்ப அன்பா இருக்காங்க . ஆனா எங்க அம்மா ஆம்பளை பிள்ளைங்க மேலே தான் ரொம்ப பாசமா இருக்காங்க . என்னன்னு புரிய மாட்டேங்குது என்று அடிக்கடி புலம்புவாள்
காஞ்சனா.

வாசலில் கார் சப்தம் கேட்டது.

வாசலுக்கு சென்றாள் காஞ்சனாஅம்மா மெதுவாக காரின் கதவை திறந்து இறங்கினாள்.
முன் கதவை திறந்து கொண்டு அத்தை என்று கத்திக் கொண்டே காலை கட்டிப்பிடித்தான் ராகேஷ.

வாங்கம்மா வணக்கம்.
நல்லா இருக்கியாம்மா
வாரேவதி …வா …பெருமாள்… நீங்க தான் முதல் விருந்தாளி
வருசா வருசம் நாங்க தானே உங்களுக்கு முதல் விருந்தாளி . பெருமாள் சொன்னான்.
அண்ணே ராகேசுக்கு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்கி கொடுங்க …ரூபாயை நீட்டினாள்மாதவன் வாங்கிக் கொண்டான்.

பெரியப்பா உங்க மொபைல கொடுங்க …ராகேஷ் மாதவனிடமிருந்து மொபைலை வாங்கினான்ராகேஷ் மூண்றாம் வகுப்பு படிக்கிறான்எதிலும் கெட்டி… ரொம்ப சுட்டி.

பெரிய பெரியப்பா …எனக்கு கொஞ்சமா ஐநூறு ரூபாய்க்கு வெடி வாங்கி வாங்கபோனை துன்டித்தான்.

தாத்தா வேறே ஊருல வெடி வாங்கி வச்சிருக்காரம்சாயங்காலமா ஊருக்கு போயி எடுத்துட்டு வந்திடலாம் ரேவதி மகனிடம் சொன்னாள்.

ஹையா ! ராகவி அக்காவர்றாங்க

காஞ்சனாவும் ரேவதியும் வெளியில் வந்து பார்த்தார்கள் . ராகவி ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்ராகேஷ் ஓடிச் சென்று பையை வாங்கினான்.

எங்கடி உன் வீட்டுக்காரர் …
அவரு வீட்டுக்குப் போயிருக்கார்சாயங்காலமா வருவார்.
சரி… வா உள்ளே
என்ன ராகவிஎப்படி இருக்கே …கேட்டாள் ரேவதி
ஒரே பிசிக்காபோன்ல பேசக் கூட நேரங்கிடைக்கிறதில்ல.
படிப்பு எப்படி போகுது
இன்னும் ஒரு எக்ஸாம் இருக்குஅப்புறம் அவ்வளவு தான்எங்க உங்க வீட்டுக்காரரை காணாம்.
காரை எடுத்துட்டு போனவர் தான் , இன்னும் ஆளைக்காணோம்பழைய நண்பர்களை பாக்கப் போயிருப்பார்.

என்னம்மா …என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க …ஏதாவது உதவி தேவையாராகவி கேட்டாள்.
மொதல்ல சாப்பிடுபாட்டி வந்திருக்காங்க பாத்தியா?
பாத்தேன்ஒற்றை வரியில் பதில் சொன்னாள்
அவங்க வயசுல பெரியவங்க …பாத்து அளவோட பேசு
சரிம்மா… என்றாள் ராகவி

மறு நாள் தீபாவளி , அதற்குள் ரேவதி தனது அப்பாவை பார்த்து வர வேண்டும் . பெருமாளை இன்னும் காணோம்.

ராகவி லேசாக ராகேஷை சீண்டினாள்பதிலுக்கு ஓங்கி ஒரு குத்து விட்டு சென்றான்.
ஓடுஓடுஇங்கெ தானே வரணும்
நான் வந்தாத்தானே என்று கூறி விட்டு ஓட்டம் எடுத்தான்.
பெருமாள் வந்தாச்சு …ரேவதியும் ராகேசும் ஊருக்கு செல்வதற்கு தயாரானார்கள்.
அம்மாவிடம் காஞ்சனா புதிதாக வாங்கிய உடைகளை காண்பித்தாள்.
ரொம்ப நல்லா இருக்குமாநீ எனக்கு எடுத்த புடவை ரொம்ப நல்லா இருக்கு .
இது உங்களுக்கு புடிக்குதோ என்னவோன்னு நினைச்சேன்.
இல்லமா நல்லாருக்கு….அப்பா இந்த மாதிரி சேலைதான் எடுத்து கொடுப்பார்.

வாசலில் பைக் வந்து நின்றது
அம்மா எட்டிப்பார்த்தாள்ராகவியின் கணவன் வாசு
வாங்கப்பாநல்லா இருக்கீங்களா
ஆமா …பாட்டி
வாங்க வாசு
ஆமா ஆன்ட்டி
எப்ப வந்தீங்க வாசு …மாதவன் கேட்டான்
இப்பத்தான் வந்தேன் அண்ணே
சாப்பிடுங்க வாசு
இல்லை ஆன்ட்டி …இப்பத்தான் சாப்பிட்டுட்டு வர்றேன்நாளைக்கு வந்து சாப்பிடுறேன்.
மெதுவாக எழுந்து வெளியே சென்றான் . ராகவியும் எழுந்து உடன் சென்றாள்.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆச்சுஇன்னும் ராகவியை அவனுடைய வீட்டுக்கு அழைச்சுட்டு போகலைஅப்பா அம்மாவுக்கெல்லாம் கல்யாணம் செயதுக்கிட்டது தெரியும்னு சொல்றான் அப்புறம் என்ன அவனுக்கு தயக்கம் வீட்டுக்கு கூட்டிப்போக.
பிரச்னை வந்தா அதையெல்லாம் சமாளிக்கனும் . பிரச்னைக்கு பயந்து தாலி கட்னவளை வீட்டுக்கு கூட்டி போகாமெ இருக்கிறது தப்பில்லையாஎவ்வளவு நாளைக்கு இப்படி !.
ஊருஉலகத்தில காதலிச்சு கல்யாணம் பண்ணலையா? . காதல் கல்யாணம் பண்ணினவங்கல்லாம் இப்படித்தான் வீட்டுக்கு தெரியாமெ வாழ்ந்துக்கிட்டு இருக்காங்களா?
சொந்தம் பந்தம் , மாமனார்மாமியார்நாத்துனார் , மச்சான்கொழுந்தன்என்ற உறவுகளுக்கு மத்தியில் இன்பம்துன்பம் , சண்டை சச்சரவுசமாதானம்உதவி , உபத்திரவம் , வீராப்புவிட்டுக் கொடுத்தல் என்று வாழ்க்கையை வாழ்ந்தால் அல்லவா வாழ்க்கை முழுமையாகும்.. நாலு சுவத்துக்குள்ள எனக்கு நான் உனக்கு நீ என்று மட்டும் வாழ்ந்தால் வாழ்க்கையாகுமா ! நல்லது கெட்டது நடந்தால் அதையும் குடும்பத்துக்கு தெரியாமெ மறைக்க முடியுமா ! அபபடி மறைப்பது எவ்வளவு பெரிய குற்றம்.. குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமாகலந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்ற சூழல் வரும் போது எதிர்ப்புகள் முளைக்குமே அப்போது எப்படி சமாளிக்க முடியும்அப்போது சமாளிக்க முடியுமென்றால் அதை இப்போதே செய்ய வேண்டியதுதானேஒரு பெண்ணுக்கு அடிப்படை தேவைகள் மட்டும் கிடைத்து விட்டால் அதுவே முழுமையான வாழ்க்கையாகி விடாது . குடும்பத்திடம் ஒன்றி வாழ வேண்டும் அது தான் பெண்ணுக்கு பெருமைஓவ்வொரு பெண்ணும் அதை தான் விரும்புகிறாள் அது ராகவி விசயத்தில் கிடைக்கவில்லை . இன்றைய சமுதாய சூழலில் ராகவிக்கு இப்படி ஒரு நிலையாஉண்மை காரணம் ஊமையாகவே இருக்கிறதுசொல்ல முடியாமல் தவிக்கிறாள்சொல்ல வேண்டியதை மறைக்கிறாள்உண்மை என்றும் ஊமையாவதில்லைவிரைவில் விடிவு காலம் வரட்டும்பாட்டிக்கு ராகவியை பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது.

ஏம்மாராகவி …தம்பியை உள்ளே கூட்டிட்டு போஉள்ளே போயி பேசுங்க.

அம்மா சொன்னது ராகவிக்கு ஞாபகம் வந்ததுசரி பாட்டி என்று ஒற்றை வரியில் நிறுத்தி கொண்டாள்.

சரிராகவி நான் காலைல்ல வர்றேன் என்று புறப்பட்டான் வாசு.
கேட் வரை சென்று வழியனுப்பி வைத்தாள் ராகவி.
ராத்திரிக்கு வருவாரா உன் வீட்டுக்காரர் . காஞ்சனா கேட்டாள்.
இல்லம்மா …நாளை காலல தீபாவளியை அவங்க வீட்ல கொண்டாடிட்டு தான் வருவார்.
அவங்க வீட்ல இருக்க வேண்டியவ …இங்கெ தனியா உக்காந்துகிட்டு இருக்கே

விடிஞ்சா தீபாவளி ராகேசுக்கு படு உற்சாகம் தூக்கம் வரலை எப்ப விடியும்ன்னு கேட்டு கேட்டு தூங்கிப்போனான்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டான் . மாதவன் வாங்கிய ஆயிரம் ரூபாய் பட்டாசு மூலையில் இருப்பதை பார்த்தான்தாத்தாவும் ஐநூறு ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கி கொடுத்திருந்தார்முகத்தை கழுவிவிட்டு அப்போதே பட்டாசு போடத் தொடங்கிவிட்டான்.

மாதவன் தன் வீட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு தனது குடும்பத்துடன் காஞ்சனா வீட்டுக்கு வந்தான்.

அனைவரும் தீபாவளி வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர் .
காஞ்சனா வீட்டில் இப்போதுதான் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தனஅக்கம் பக்கத்தில் உள்ள சில நண்பர்களும் வந்திருந்தனர்புதிய ஆடைகள் உடுத்தி டிஜிட்டல் கேமராவினால் விதவிதமாக போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

பூஜையை முடித்துவிட்டு காங்சனா அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினால்வீட்டிற்குள் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்நண்பர்களின் தொலை பேசி அழைப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்ததுஊறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்வீடு குதூகலத்துடன் இருந்தது.


அம்மாவை சுற்றி அமர்ந்து கொண்டு கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருந்தனர்எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டு தன் மக்களோடும் பேரக் குழந்தைகளோடும் மகிழ்ச்சியோடு இருந்தாள்.

பட்டாசு வெடித்து அலுத்துப் போய் வீட்டுக்கு வந்து இருக்கiயில் அமர்ந்தான் ராகேஷ்.
ராகவி சென்று அவன் அருகில் அமர்ந்தாள்ராகேஷ் படக்கென்று எழுந்து அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தான் . அவ்வளவு அலுப்பு அவனுக்கு . ராகவி விடவில்லை அங்கும் தொடர்ந்து சென்று ராகேசிடம் வம்பிழுத்தாள்ராகேஷ் உதைக்க , ராகவி அடிக்க இருவரும் விளையாட்டாக சண்டை போட்டுக் கொண்டனர் . ஒரு சமயத்தில் ராகவியின் முடியைப்பிடித்து பலமாக ராகேஷ் இழுக்க ராகவி வேதனையால் துடித்துப் போனாள்அவனை அடிப்பதற்கு கை ஓங்கிய போது மொபைல் ஒலித்தது.
ஹலோ
என்ன குரல் ஒரு மாதிரி இருக்குமறு முனையில் வாசு.
ஆமா… நீ விட்டுட்டு போயிருஇங்கே நான் …சின்னப்பையன்ட்டே கூட அடி வாங்குறேன்.
ராகவிஎன்ன சொல்றே
ஆமா … ராகேஷ் தலை முடியை புடிச்சு பலமா இழுத்துட்டான் . தலையே வலிச்சுருச்சு.
இருக்க வேண்டிய இடத்தில இருந்தா இதெல்லாம் நடக்குமாஇப்ப நீ எங்கே இருக்கே!

இதோ வந்துட்டேன் …வச்சுரவா
ம்ம்ம்
மாதவன்பெருமாள் , ரேவதி , அனைவரும் வெளியில் உறவினர்களை பார்க்க சென்றுவிட்டனர்காஞ்சனாஅம்மாராகவிராகேஷ் மட்டும் வீட்டில் இருந்தனர்.
சிறிது நேரத்தில் வாசு வந்தான்நேராக ராகவியிடம் சென்றான் . ராகவி அவளது பிரச்னைகளை அடுக்கடுக்காக சொன்னாள்.

எங்கே அவன் …

டி.வி பாத்துக்கிட்டு இருக்கான்.

டேய் …இங்கே வாடாஏண்டா ராகவியை தலை முடியை பிடிச்சு இழுத்தேநான் கூட அடிச்சதில்லை அவளை… கோபமாக அதட்டினான்.

ஏய்என்னப்பா …சின்னப்பயலை போயி அதட்டிக்கிட்டு இருக்கேஅம்மா கேட்டாள்

இருவரும் ஏதோதோ வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்என்ன பேசினார்கள் என்று எதுவும் விளங்கவில்லை.

என்ன வாசு ஒரு சின்ன பையன் விசயத்துக்குப் போயி இவ்வளவு சீரியசா பேசிக்கிட்டுகாஞ்சனா கேட்டாள்

ராகவி …காலல புறப்படு ஊருக்குப் போகனும்.

யாரும் ஒன்றும் பேசவில்லை
சிறிது நேரம் கழித்து வாசு புறப்பட்டு போய்விட்டான்.
வீட்டில் கலகலப்பு இல்லை.
அவரவர் வீட்டில் அவரவர் இருந்தால் என்னராகவி அவளாக பேசிக் கொண்டாள்.
ரெண்டு நாளைக்கு அம்மா வீட்ல நிம்மதியா இருக்கலாம்னா முடிய மாட்டேங்குது.
இனிமேல் யாராவது வந்தால் நான் வர மாட்டேம்மாஎங்கோ காட்ட வேண்டிய கோபத்தை ராகவி இங்கு காண்பித்தால்அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும்.
பெருமாளுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதுஏன் இங்கு வரணும்.
எங்களாலே நிம்மதியா இருக்க முடியுதா?

அவள் புரிந்து பேசுகிறாளா புரியாமல் பேசுகிறாளா புரியவில்லைஅவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் இவள் முதலில் இங்கு வந்திருக்க மாட்டாள் என்பது பாவம் அவளுக்கு புரியவில்லை.

காஞ்சனாவுக்கு தலை சுற்றியது ஒரு பக்கம் தம்பி , மறுபக்கம் மகள் யாருக்காக பேசுவது.
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ராகவி என்று சொல்லிப்பார்த்தாள்ராகவி கேட்பதாக இல்லைமாறாக யாரும் வரக்கூடாது என்றாள்பெரிய குடும்பத்தில் இது சாத்தியமா.
உன்னை மாதிரி எல்லோராலேயும் இருக்க முடியுமாமுடியாதுமொதல்ல உன் வீட்டுக்காரர்கிட்டே அவர் வீட்டுக்கு கூட்டிப்போயி அறிமுகப்படுத்த சொல்லு .அதை செஞ்சையின்னா …அந்த குடும்பத்தோட ஒன்றிட்டா உனக்கு இந்த மாதிரி கீழான என்னமெல்லாம் வராதுஅந்த டென்ஷன் தான் உன்னை இப்படி பேச வைக்குது.

இப்போது காஞ்சனாவின் பேச்சு சற்று மாறியது . இந்த வீட்ல என்னுடைய பிள்ளைகளுக்கு தான் முதலிடம் அப்புறம் தான் மத்தவங்கஇங்கே வந்துட்டு ஏம் பிள்ளை அழுதுட்டு நிக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை . ரெண்டு நரளைக்கு வந்தா சந்தோசமா இருந்துட்டு போகனும்அதான் முக்கியம்.. அடுத்த வருசமெல்லாம் அவங்க அவங்க வீட்ல தீபாவளி கொண்டாடுங்க …காஞ்சனா சொல்லத்தான் நினைத்தாள் ஆனால் முடியவில்லையார் சொந்தம்இந்த உலகில் உயிருடன் இருக்கும் வரை அனைவரும் சொந்தம் . அதற்கப்புறம் யார் சொந்தம் ?


Comments

Popular posts from this blog

காலணி

விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...

ஒரு நாள் …இரவு ஜெயித்தது…